மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு காங்கிரஸ், தி.மு.க. உரிமை கொண்டாடக்கூடாது-ஓசூரில் பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி


மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு காங்கிரஸ், தி.மு.க. உரிமை கொண்டாடக்கூடாது-ஓசூரில் பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி
x
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் நேற்று, பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான நசிம்மன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஓசூர்- கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை வழியாக ரெயில்வே பாதை அமைக்கும் திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு செயல்படுத்துவதற்கு முழு மூச்சாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது பெங்களூரு-ஓசூர்-கிருஷ்ணகிரி வரை ரெயில்வே பாதை அமைப்பதற்கு சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய சுமார் ரூ.2½ கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு தற்போதைய எம்.பி. டாக்டர் செல்லகுமார், ஏதோ காங்கிரஸ் முயற்சியால் இது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி விளம்பரம் தேடி வருவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை காங்கிரஸ், தி.மு.க. உரிமை கொண்டாடக்கூடாது. வருகிற 2024-ம் ஆண்டிற்குள் ஓசூரில் தனியார் பங்களிப்புடன் விமான சேவை தொடங்கப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 20 இடங்களை பா.ஜனதா பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் கிருஷ்ணகிரியும் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட தலைவர் நாகராஜ், துணைத்தலைவர் முருகன், பொதுச்செயலாளர் மனோகர், மாவட்ட செயலாளர் பிரவின்குமார், மாநில தொழில்துறை பிரிவு துணைத்தலைவர் கே.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story