தமிழக அமைச்சர்கள் பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்; பா.ஜ.க. தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் பேட்டி
தமிழக அமைச்சர்கள் பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கூறினார்.
கொடைக்கானலில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் பிரசார பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்தபோது, கூறியதாவது:-
தி.மு.க. தனது தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். அதனை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பழங்குடியின மக்களுக்கு உரிய உரிமையை வழங்க மறுக்கின்றனர் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்க இருப்பதாகவும், தீர்வு கிடைக்கவில்லை என்றால், மக்களோடு சேர்ந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
தமிழக அமைச்சர்கள் பொதுவெளிகளில் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். அமைச்சர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். அதற்கு தி.மு.க. தலைவர் ஒரு தனி பாசறை பட்டறை நடத்த வேண்டும். தி.மு.க. செய்து வரும் ஊழலை திசை திருப்புவதற்காக பிரிவினைவாத சக்திகளுக்கு ஊக்கமளித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில மாவட்ட நிர்வாகிகள் கணேஷ்பிரபு, மதன்கோவிந்தன், கணேசன், நகர நிர்வாகிகள் சார்லஸ், ஹரி, சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.