"போட்டித்தேர்வை முழு தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும்"; டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பேச்சு


போட்டித்தேர்வை முழு தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும்; டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பேச்சு
x
தினத்தந்தி 26 Feb 2023 2:00 AM IST (Updated: 26 Feb 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

போட்டித்தேர்வை முழு தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று பழனியில் நடந்த நிகழ்ச்சியில் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பேசினார்.

திண்டுக்கல்

தமிழ்நாடு பொருளாதார வல்லுனர்கள் கூட்டமைப்பின் 42-வது மாநாடு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் லெனார்டு, பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். மத்திய தொழிலாளர் துறையின் துணை இயக்குனர் சுப்புராஜ், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், அழகப்பா பல்கலைக்கழக முதுநிலை பேராசிரியர் நாராயணமூர்த்தி, பழனியாண்டவர் கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநாட்டில் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் ஜோதி சிவஞானம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் முழு தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். கொரோனா காலத்துக்கு பிறகு தமிழகத்தில் தான் போட்டித்தேர்வுகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. ஆனால் குறிப்பிட்ட அளவில்தான் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. எனவே மாணவர்கள் அரசு பணிகளை மட்டும் எதிர்பார்த்து இருக்காமல் தனியார் துறைகளிலும் உயரிய பதவிகளை அடைய முயற்சிக்க வேண்டும் என்றார்.

இதில், தமிழகம் முழுவதும் இருந்து பொருளாதார வல்லுனர்கள், கல்லூரி பொருளாதாரத்துறை பேராசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பழனியாண்டவர் கலைக்கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர் திருப்பதி, மாநாட்டுக்கான செயலாளர் ரவிசங்கர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story