வன உயிரின வாரவிழாவையொட்டி பேச்சு, ஓவிய போட்டி


வன உயிரின வாரவிழாவையொட்டி பேச்சு, ஓவிய போட்டி
x

திருவண்ணாமலையில் வன உயிரின வாரவிழாவையொட்டி பேச்சு, ஓவிய போட்டியை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை வனகோட்டம் மற்றும் வனச்சரகம் சார்பில் வனஉயிரின வாரவிழாவையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, ஓவியம், வினாடி-வினா மற்றும் கட்டுரைப்போட்டி இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனுவாசன் தலைமை தாங்கினார். வேலூர் வன பாதுகாவலர் சுஜாதா, வட்டார கல்வி அலுவலர்கள் தேன்மொழி, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கலந்து கொண்டு மாணவர்களுக்கான பேச்சு, ஓவியம், வினாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்த போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற உள்ள வனஉயிரின வாரவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.


Next Story