பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு-கட்டுரை போட்டி
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு-கட்டுரை போட்டி நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான போட்டி திண்டுக்கல் டட்லி பள்ளி மைதானத்தில் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இதில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதேபோல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 27-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. ஒரு போட்டிக்கு ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து ஒருவர் மட்டுமே பங்கேற்கலாம்.
இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் போட்டிக்கான படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனரிடம் போட்டி தொடங்கும் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.