விபத்தை தடுக்க வேகத்தடை


விபத்தை தடுக்க வேகத்தடை
x

விபத்தை தடுக்க வேகத்தடை

திருப்பூர்

குடிமங்கலம்

குடிமங்கலம் பஸ் நிலையம் அருகே விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிமங்கலம் பஸ் நிலையம்

குடிமங்கலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. பொள்ளாச்சி-தாராபுரம் நெடுஞ்சாலையும், உடுமலை- திருப்பூர் நெடுஞ்சாலையும் சந்திக்கும் முக்கிய சாலையாக குடிமங்கலம் நால்ரோடு உள்ளது. பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையும் உடுமலை- திருப்பூர் நெடுஞ்சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் உடுமலை- திருப்பூர் நெடுஞ்சாலையில் குடிமங்கலம் பஸ் நிலையம் அருகே அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

இப்பகுதியில் குடிமங்கலம் போலீஸ் நிலையம், குடிமங்கலம் பஸ் நிலையம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வணிக நிறுவனங்கள், அதிக அளவில் இயங்கி வருகிறது. சாலையின்ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கு பொது மக்களுக்கு பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் பஸ்கள் குடிமங்கலம் பஸ் நிலையத்திற்குள் சென்று திரும்பிச் செல்கிறது.

வேகத்தடை

உடுமலையில் இருந்து கிராமங்கள் மற்றும் திருப்பூருக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வெளியே நின்று செல்கின்றன. பொதுமக்கள் பஸ்சில் செல்வதற்காகவும் மற்றும் போலீஸ் நிலையம் செல்வதற்காகவும் வேகமாக ரோட்டை கடந்து செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்து நெருக்கடி உள்ள குடிமங்கலம் பஸ் நிலையம் அருகே விபத்துக்களை தடுக்கும் வகையில் வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் வேகமாகவும் விதிமுறைகளை மீறி செல்கின்றனர்.

இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் குடிமங்கலம் பஸ் நிலையம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story