தொடர் விபத்துக்களை தவிர்க்கவேகத்தடை அமைக்க வேண்டும்


தொடர் விபத்துக்களை தவிர்க்கவேகத்தடை அமைக்க வேண்டும்
x

தொடர் விபத்துக்களை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும்

திருப்பூர்

குண்டடம்

குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதி கோவை- மதுரை நெடுந்தோறும் செல்லும் மெயின் சாலையில் அமைந்துள்ளது. இதனால் சிறிய டவுனாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து பஸ் ஏறி கோவை, தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் பெட்ரோல் பங்க், தனியார் மில்கள், எலக்ட்ரிக் கடைகள், மளிகைக்கடைகள், மருந்துக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பனியன் கம்பெனி உள்ளிட்டவை இங்கு அமைந்துள்ளதால் எந்த நேரமும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த ரோடு போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் கோவை- மதுரை - திருப்பூர்- காங்கேயம் ஆகிய சாலைகளுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையாகும். நெடுந்தூரம் செல்லும் வாகனங்கள் மெயின்ரோடு என்பதால் அசுர வேகத்தில் கடந்து செல்லும். இதனால் அதே நேரத்தில் மற்ற பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் பிரிந்து செல்லும்போது அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு பலர் பலியான சம்பவம் நடந்துள்ளது

தற்போது நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் வேலை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 5 பேர் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது. பலர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே மேட்டுக்கடை பகுதியில் வேகத்தடை அமைத்தால் மட்டுமே விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

----


Next Story