அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படுமா?
நாகூர் - நாகையில் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
நாகூர்;
நாகூர் - நாகையில் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
வாகன போக்குவரத்து
நாகை- நாகூர் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. நாகையில் இருந்து நாகூர் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், மீன் ஏற்றி செல்லும் வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிக அளவு சென்று வருகின்றன. குறிப்பாக காலை நேரத்தில் ஏராளமானோர் பணி நிமித்தமாக இந்த சாலையில் பயணிக்கிறார்கள். நாகூாில் இருந்து நாகை வரை விபத்துக்களை தவிர்க்க வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது.
வேகத்தடைகள்
கடந்த 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றதால் சாலைகளில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டது. தற்போது நாகூர் - நாகை சாலைகளில அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் வேதக்தடை இல்லாததால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நாகூர் - நாகை சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.