மாநில அளவிலான செஸ் போட்டி
மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது.
ராமநாதபுரம்
கீழக்கரை,
கீழக்கரை முகமது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் சிறுவர்களுக்கான மாநில சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடைபெற்றது. போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, சென்னை, செங்கல்பட்டு போன்ற 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர். விழாவை கல்லூரி முதல்வர் முகமது ஷெரீப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் செந்தில் குமார், மாணவர் நலன் தலைவர் பூபாலன், இஸ்லாமியா கல்வி நிறுவன தலைவர் முகைதீன் இப்ராகிம், ஆகியோர் முன்னிலையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணைத் தலைவர் தேவி உலக ராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார், தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன் மாநில துணை செயலாளர் எப்ரேம், மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story