விளையாட்டு போட்டி


விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 10 Jun 2022 5:29 PM GMT (Updated: 2022-06-10T23:06:56+05:30)

கமுதி அருகே விளையாட்டு போட்டி நடந்தது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே பேரையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேர்ந்த கோட்டை கிராமத்தில் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடந்தது. இதில் மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், வாலிபால், ஓவியப் போட்டி, கட்டுரை, பேச்சுப் போட்டி மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 2 நாட்கள் கபடி போட்டி நடைபெற்றது. அப்துல்கலாம் மன்றம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற இந்தபோட்டியில், சேர்ந்தகோட்டை, கலையூர், எட்டிசேரி, செங்கப்படை, கீழ்குடி இளையான்குடி, சாமிபட்டி கொல்லங்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. இதில் சேர்ந்தகோட்டை அணி முதல் பரிசையும், கலையூர் அணி 2-வது பரிசையும் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் வெற்றி கோப்பை மற்றும் பரிசுகளை கிராம தலைவர் தர்மலிங்கம், துணைத் தலைவர்கள் தர்மர், சுப்புராஜ், செயலாளர் கணபதி, பொருளாளர் தங்ககுமார், ஆகியோர் வழங்கினர். முருகேசன் எம்.எல்.ஏ., மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற தர்மன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story