நாமக்கல்லில் சுகாதார துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்


நாமக்கல்லில்   சுகாதார துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள்  கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
x

நாமக்கல்லில் சுகாதார துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.

நாமக்கல்

நாமக்கல்லில் சுகாதார துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.

இறகுப்பந்து போட்டி

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழா டிசம்பர் மாதம் 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சுகாதார துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடந்தது. முதற்கட்டமாக இறகுப்பந்து போட்டியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்து விளையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கால்பந்து, ஆக்கி, கபடி, கோகோ, ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள விழாவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

கண்காட்சி வாகனம்

இதனிடையே நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது சுகாதார துறையின் சார்பில் சிறப்பு ஒளி விளக்கு அமைக்கப்பட்ட கண்காட்சி வாகனம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்படுகிறது. இந்த சிறப்பு வாகனம் நாமக்கல் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வர உள்ளது. மேலும் சிறப்பு வாகனம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 100 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


Next Story