அமராவதி கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டி நிறைவுநாள் விழா


அமராவதி கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டி நிறைவுநாள் விழா
x

அமராவதி கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டி நிறைவுநாள் விழா நடந்தது.

கரூர்

கரூர் மாவட்டம், வெள்ளியணை திருமலை நாதன்பட்டியில் ஸ்ரீ அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்காக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதன் நிறைவு நாள் விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக இந்திய ஆக்கி அணி விளையாட்டு வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் கல்லூரியின் தலைவர் ஆடிட்டர் ஆர்.வெங்கடாச்சலம், செயலாளர் டி.நாராயணசுவாமி, முதல்வர் கே.ரமேஷ்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ஆனந்தகுமார், பயிற்சியாளர் தீபா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story