விளையாட்டு போட்டி ஆலோசனை கூட்டம்
திருவேங்கடத்தில் விளையாட்டு போட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்காசி
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், 75-வது சுதந்திர தினவிழா வட்டார விளையாட்டு போட்டிகள் நடத்த இடங்கள் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி செயலர் மணி, தலைமை ஆசிரியர் மூக்கையா, திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரான வி.பொன்னழகன் என்ற கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் சங்கரன்கோவில் வட்டார விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தேதி ஆகியவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சுப்புலாபுரம் செங்குந்தர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் செய்திருந்தார். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் ஆர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story