மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி
மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி
நாகப்பட்டினம்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் கீழ்வேளூர் வட்டார வளமையம் சார்பில் கீழ்வேளூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. போட்டியை நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகாசினி தொடங்கி வைத்தார். போட்டியில் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், ரொட்டி கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story