காரைக்குடியில் விளையாட்டு போட்டிகள்


காரைக்குடியில்  விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில் 6 எஸ். ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் வருடாந்திர விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிக்கு ஆசிரியர் ஹென்றிபாஸ்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக நிர்மல் வரவேற்றார். இதையொட்டி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி, ஸ்கேட்டிங் போட்டி மற்றும் நடன போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை பரிசுகளை வழங்கினார்.

விழாவில் டி.இ.எல்.சி. சபை குரு ஆண்ட்ரூஸ், டாக்டர் காட்வின் சந்திப், நகர்மன்ற கவுன்சிலர்கள் சோனா கண்ணன், சேட் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பிரகாஷ் செய்திருந்தார். முடிவில் சித்திக் நன்றி கூறினார்.


Next Story