மின் ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
சேலத்தில் மின் ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
சேலம்
தமிழ்நாடு மின் பகிர்மானம் மற்றும் உற்பத்தி கழகம் சார்பில் சேலத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் நடந்தது. போட்டியை சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கபடி, டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன், டென்னிஸ், கேரம், வாலிபால், கிரிக்கெட், செஸ், ஆக்கி மற்றும் அத்லட்டிக்ஸ் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மண்டல விளையாட்டு பொறுப்பாளர் புலேந்திரன் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில், சோனா பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story