தூத்துக்குடியில் மின்சார வாரிய அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள்


தூத்துக்குடியில் மின்சார வாரிய அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
x

தூத்துக்குடியில் மின்சாரவாரிய அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மின்சாரவாரிய அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் நேற்று தொடங்கி வைத்தார்.

விளையாட்டு போட்டி

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஆண்டுதோறும் மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்களுக்கான மாநில அளவிலான ஆண்கள் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட அளவிலான மின்சார வாரிய அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. போட்டிகளை தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயற்பொறியாளர் (பொது) ரெமோனா முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தினராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கேரம்

தொடர்ந்து கேரம், சதுரங்க போட்டிகள், தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து திரளான மின்சார வாரிய ஊழியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளை கணேசன், நோபுள் ஸ்டேன்லி, கலைக்கண்ணன், தமிழரசன், பொன்மணி ஆகியோர் நடத்தினர். தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட விளையாட்டு பொறுப்பாளர் சந்தணராஜ் நன்றி கூறினார்.

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்கள் மண்டல அளவிலான போட்டிகளிலும், மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.


Next Story