சுகாதாரத்துறையினருக்கு விளையாட்டு போட்டிகள்


சுகாதாரத்துறையினருக்கு விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுகாதாரத்துறையினருக்கு விளையாட்டு போட்டிகள்

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட சுகாதார பணிகள் இயக்குனரின் உத்தரவின்படி வட்டார அளவில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி டாக்டர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி வட்டார சுகாதாரத்துறை சார்பில் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றன. இந்த போட்டிகளை கோத்தகிரி வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தொடங்கி வைத்தார். இதில் 100, 200 மீட்டர் ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், கைப்பந்து, கிரிக்கெட், எறிபந்து போட்டிகள் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

மேலும் இறகு பந்து, சதுரங்கம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மற்றும் கோலம், பாட்டு, நடன போட்டிகள் புயல் நிவாரண கூட உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் என மொத்தம் 125 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story