மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள்


மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
x

மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை

இலுப்பூரில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவையொட்டி அன்னவாசல் வட்டார மருத்துவத்துறையின் சார்பில், வட்டாரத்தில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அன்னவாசல் வட்டார மருத்துவ அலுவலர் கலையரசன் தலைமை தாங்கினார். இதில் குண்டு எறிதல், பானை உடைத்தல், தட்டு ஏறிதல், ஓட்டப்பந்தயம், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் அன்னவாசல் வட்டாரத்திற்கு உட்பட்ட மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story