அரியலூர் மருத்துவக்கல்லூரியில் விளையாட்டு போட்டிகள்
அரியலூர் மருத்துவக்கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி கடந்த ஆண்டு செயல்பட தொடங்கியது. இதில் 150 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மருத்துவக்கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் டாக்டர் முத்துகிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சித்ரா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி விளையாட்டு போட்டிகளை தலைமை விடுதிக்காப்பாளர் டாக்டர் கொளஞ்சிநாதன் தொடங்கி வைத்தார். இதையடுத்து, கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) கோ-கோ நடக்கிறது. இந்த போட்டிகள் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு கல்லூரி ஆண்டு விழாவின் போது சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும். போட்டிக்கான ஏற்பாடுகளை மருத்துவக்கல்லூரி விளையாட்டு பிரிவு டாக்டர் ராஜேஷ் கண்ணா செய்திருந்தார்.
Related Tags :
Next Story