விளையாட்டு விழா


விளையாட்டு விழா
x

விளையாட்டு விழா

தஞ்சாவூர்

தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நேற்று விளையாட்டு விழா நடைபெற்றது. விளையாட்டு துறை தலைவர் ரமேஷ் வரவேற்றார். விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீவித்யா பேசினார். விளையாட்டு போட்டியில் அன்னை கண்ணம்மாள் (மஞ்சள்) குழுவினர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கல்வியியல் மற்றும் விளையாட்டு துறை தலைவர் செல்வம் கலந்து கொண்டு பேசுகையில், அக்காலத்து உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். விளையாட்டு மூலம் மாணவர்கள் உடல் ஆரோகியம் மனவலிமையில் சிறந்து விளங்கலாம். உடல் பயிற்சி நம் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும் என்றார். இதில் மேலாண்மை மற்றும் அறிவியல் துறை பேராசிரியர் விஜயலட்சுமி, மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் கற்பகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் துணை வேந்தர், பதிவாளர், மாணவர், முதன்மையர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விளையாட்டுத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.


Related Tags :
Next Story