மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் விளையாட்டு விழா


மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் விளையாட்டு விழா
x

மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே ஜங்களாபுரம் கூட்ரோட்டில் உள்ள மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் 9-ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் எம்.தங்கவேல் தலைமை தாங்கினார். முதல்வர் செண்பகாதேவி வரவேற்றார். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்து, விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் சாகச நிகழ்ச்சி நடந்தது, பின்னர் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரபாண்டியன், நாட்டறம்பள்ளி தாசில்தார் ஜி.குமார் ஆகியோர் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் அருணா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

-


Next Story