விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


விளையாட்டு வீரர், வீராங்கனைகள்  சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்தார்.

தேனி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் 3 வகையில் செயல்படுத்தப்படுகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று பதக்கங்கள் வென்றிருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பிரிவுக்குமான தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் sdat@tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story