உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி


உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி
x

உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி

தஞ்சாவூர்

மெலட்டூர் பகுதியில் உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மருந்து தெளிக்கும் பணி

பாபநாசம் தாலுகா மெலட்டூர், கள்ளர்நத்தம் தேவராயன்பேட்டை பகுதிகளில் கோடை பயிராக சித்திரை பட்டத்தில் உளுந்து அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடர்மழை காரணமாக உளுந்து செடிகளில் பூச்சிகள் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. எனவே உளுந்து பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தவும், தாக்காமல் இருக்கவும் உளுந்து செடிகளுக்கு ஊட்ட சத்து டானிக் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உளுந்தை கொள்முதல் செய்ய வேண்டும்

இதுகுறித்து உளுந்து சாகுபடி விவசாயி கூறியதாவது:-

இந்த ஆண்டு சித்திரை பட்டத்தில் தேவராயன்பேட்டை பகுதியில் கோடை பயிராக உளுந்து அதிகளவில் பயிர் செய்துள்ளோம். கோடை மழை அதிகளவில் பெய்ததால் உளுந்து செடிகளில் பூச்சிகள் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகி்றோம். பருத்தியை போல் ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி மூலம் உளுந்தையும் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story