மீனவர்கள் வலையில் குறைந்த அளவே சிக்கிய கணவாய் மீன்கள்


மீனவர்கள் வலையில் குறைந்த அளவே சிக்கிய கணவாய் மீன்கள்
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் மீனவர்கள் வலையி்ல் குறைந்த அளவே கணவாய் மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சலில் மீனவர்கள் வலையி்ல் குறைந்த அளவே கணவாய் மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

விசைப்படகுகள்

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு விதிக்கப்பட்ட 60 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த 31-ந் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.

இதையடுத்து 1-ந் தேதி முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றுள்ளன. ஆழ்கடல் பகுதியில் தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். இது தவிர கிளி மீன்கள், செந்நவரை, நாக்கண்டம் போன்ற மீன்களும் கிடைக்கும். இந்த வகை மீன்கள் பற்பசை தயாரிப்பு ஆலை மற்றும் மீன் எண்ணை ஆலைகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்வர்.

மீனவர்கள் கவலை

இந்தநிைலயில், கடந்த 1-ந் தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற குளச்சல் விசைப்படகுகளில் 3 படகுகள் நேற்று முன்தினம் காலை கரை திரும்பின. இந்த விசைப்படகுகளில் கிளி மீன்கள் ஓரளவு கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து விற்பனை செய்தனர்.

இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 8 படகுகள் நேற்று கரை திரும்பின. அவற்றுள் குறைந்த அளவு ஓலக்கணவாய் மற்றும் தோட்டுக்கணவாய் மீன்கள் கிடைத்தன. அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து மீனவர்கள் விற்பனை செய்தனர். தற்போது கணவாய் மீன்களின் சீசனாகும். ஆனால் குறைந்த அளவு கணவாய் மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் டீசல் செலவுக்கு கூட மீன்கள் கிடைக்கவில்லை என கவலை அடைந்துள்ளனர்.


Next Story