ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை கைது செய்த இலங்கை கடற்படை


ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
x

ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது, தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை மீறி மீன் பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளது.


Next Story