விசைத்தறி கூடங்களை இலங்கை துணை தூதர் ஆய்வு
சேலம்
இளம்பிள்ளை:-
இளம்பிள்ளை, இடங்கணசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி தொழில் அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை தூதர் வெங்கடேஸ்வரன், இளம்பிள்ளைக்கு வந்து விசைத்தறி கூடங்களில் ஜவுளி தயாரிப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இங்கு தயாராகும் ஜவுளி உற்பத்தி மற்றும் விசைத்தறி நவீனமாக்குதல் குறித்து உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், ஐவுளி உற்பத்தியாளர்களிடம் இலங்கையில் உற்பத்தி செய்ய முன்வந்தால் அதற்கு உண்டான அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என்று கூறினார்.
Next Story