எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 9 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 9 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
x

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 9 நாகை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இராமேஸ்வரம்,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 9 மீனவர்கள் முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்தாக கூறி 9 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை திரிகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story