மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு இறுதிச் சடங்கு..! கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த மக்கள்


23 நாட்களுக்கு முன் பள்ளி சென்ற மாணவி அதே சாலை வழியே அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

கடலூர்,

மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் உள்ளது.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் புதைப்பதாக இருந்தது. இதனையடுத்து பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திடீரென பிரேத பரிசோதனையில் முடிவில் சிக்கல் இருந்தால், ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் பரிசோதனை செய்யும் வகையில் உடலை பரிசோதனை செய்வதற்காக புதைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பெரியநெசலூர் கிராமத்தில் வெளிநபர்கள் யாரும் இல்லை. ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராம மக்கள், உறவினர்கள் ஆகியோர் மட்டுமே உள்ளனர். முக்கிய சாலையிலிருந்து பெரியநெசலூர் கிராமம் வரை மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.மாணவியின் உடல் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. எந்தவித இடையுறும் இல்லாமல் ஸ்ரீமதியின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமக நடைபெற்றன.

இந்த நிலையில், சற்றுமுன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.இறுதி ஊர்வல வாகனத்தில் ஸ்ரீமதியின் உடல் ஏற்றப்பட்டது.

மாணவியின் உடலுக்கு கண்ணீர் மல்க பெற்றோர், உறவினர்கள், கிராமத்தினர் என பலரும் பிரியாவிடை கொடுத்தனர். அக்கா ஸ்ரீமதிக்கு தம்பி செய்த இறுதிச்சடங்கு செய்தார். 23 நாட்களுக்கு முன் பள்ளி சென்ற மாணவி அதே சாலை வழியே அவரது உடல் இறுதி பயணம் கொண்டு செல்லப்பட்டது.



Next Story