ஸ்ரீமதி உடலோடு சேர்த்து கட்டப்பட்டு இறுதி வரை செல்லும் பாடப் புத்தகம்..! நெஞ்சை உலுக்கிய காட்சி


ஸ்ரீமதி உடலோடு சேர்த்து கட்டப்பட்டு இறுதி வரை செல்லும் பாடப் புத்தகம்..! நெஞ்சை உலுக்கிய காட்சி
x
தினத்தந்தி 23 July 2022 12:02 PM IST (Updated: 23 July 2022 12:03 PM IST)
t-max-icont-min-icon

அவரது ஆசையை நிறைவேற்ற உயிரியல் புத்தகம் மாணவியின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

கடலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி மரணமடைந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டு உத்தரவால் மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் சற்றுமுன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்காரணமாக காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் உள்ளது.

பாடப் புத்தகத்தோடு மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மாணவி ஸ்ரீமதியின் உடலோடு பாட புத்தகம் சேர்த்து கட்டப்பட்டது. அவர் மருத்துவ படிப்பை தேர்வு செய்ய எண்ணியிருந்தார். இதனால் அவரது ஆசையை நிறைவேற்ற உயிரியல் புத்தகம் மாணவியின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது. இது காண்போரின் கண்களில் கண்ணீரை வரச் செய்தது.

முதல் முறையாக பெரியநெசலூர் மயானத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்துள்ளனர். மயானத்தில் நடைபெறும் இறுதி சடங்கில் அமைச்சர் கணேசன், அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.


Next Story