ஸ்ரீமுஷ்ணம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்


ஸ்ரீமுஷ்ணம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

கடலூர்

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் ஆறுமுக செட்டிக்குளம் சந்தைத்தோப்பு அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவில் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. மேலும் நிகும்பலா யாகம், மயானக்கொள்ளை, பச்சைக்காளி - பவளக்காளி திருநடனம், இருள்முக உற்சவம், பஞ்சமுக உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, தாண்டவராய சுவாமிக்கும், அங்காள பரமேஸ்வரிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. தேரானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 28-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவோடு சிவராத்திரி திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை அங்காளம்மன் கோவில் தெருவாசிகள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.


Next Story