ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல்கோபுரத்தில் விரிசல்


ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல்கோபுரத்தில் விரிசல்
x

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டது. ரூ.67 லட்சத்தில் சீரமைக்கப்படஉள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டது. ரூ.67 லட்சத்தில் சீரமைக்கப்படஉள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோபுரத்தில் விரிசல்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றி சிறிய மற்றும் பெரிய கோபுரங்கள் பல உள்ளன. ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியையும், கீழ அடையவளஞ்சான் வீதியையும் இணைக்கும் சாலையில் கிழக்கு நுழைவு வாசலில் சிறிய கோபுரம் உள்ளது.

இந்த கோபுரத்தில் கீழிருந்து ஒன்று மற்றும் இரண்டாவது நிலைகளில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே கோபுரத்திற்கு சேதம் ஏற்பட்டு மேலும் உடைந்து விழாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கட்டைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழுது பார்க்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

ரூ.67 லட்சத்தில்சீரமைப்பு பணிகள்

இந்நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்திலிருந்து சிறிதளவு செங்கல் கட்டுமானங்கள் நேற்று காலை கீழே விழுந்துள்ளன. இக்கோபுர வாசல் வழியாக தினமும் பொதுமக்கள் கடந்து செல்வதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதற்கு முன் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றி கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போதைக்கு ஆபத்து ஏதுமில்லை. எனினும் ரூ.67 லட்சம் செலவில் இக்கோபுரத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றனர்.


Next Story