ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில்திருவேடுபறி நிகழ்ச்சி
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் திருவேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம்:
நவதிருப்பதி கோவில்களில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் அத்யயன உற்சவம் இராப்பத்து 8-வது நாள் திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு திருவாராதனம், காலை 10.30 மணிக்கு நித்யல் கோஷ்டி, மாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி கள்ளப்பிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார்.
வசர் குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு திருவேடுபறி நடந்தது. திருமங்கை ஆழ்வார் தன் படைவீரர்களுடன் பெருமாள் திருவாபரணங்களை களவாடி செல்ல, சுவாமி கள்ளப்பிரான் குதிரை வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டி பிடிக்கும் நிகழ்வு நடந்தது. அதன் பின்னர் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி திருமங்கைஆழ்வார் படைவீரன் ஒருவரிடம் பெருமாள் சார்பாக திரவாபரணங்களின் பெயர்களைச் சொல்லி யாரிடம் எனக் கேள்விகள் கேட்டல் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் சீனிவாசன் தேவராஜன், வாசன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.