ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் பணி: உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் பணியை திங்கட்கிழமை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் மீன் குஞ்சுகளை விடும் பணியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.
தாமிரபரணியில் மீன் குஞ்சுகள்
உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் பணி நடந்தது. தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, சேல் கெண்டை, கல்பாசு, கட்லா, ரோகு, மிர்கால் போன்ற நாட்டின கெண்டை மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டு தொடங்கி வைத்தார்.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ., மீனவர் நலத்துறை ஆணையாளர் பழனிச்சாமி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடல் மீன் வளர்ப்பு ஆணை
நிகழ்ச்சியில், கடல் கூண்டுகளில் 40 மற்றும் 60 சதவீத மானிய உதவியின் மூலம் கடல் மீன் வளர்ப்பு மேற்கொள்வதற்கான ஆணைகள் மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த செல்வம், அரிகிருஷ்ணன், வெள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த ஆலோசனை மரியான், மரிய ராஜபாண்டி, சேசுராஜ், மரியநிக்சன், சிறைகுளம் கடலாடி சிக்கல் பகுதியை சேர்ந்த ஜான் கென்னடி, சிறுநாடார்குடியிருப்பு பகுதியை சேர்ந்த லிங்கேசன் ஆகிய 8 மீனவர்களுக்கு வழங்கப்பட்டன.
மீன் விற்பனை செய்வதற்கு குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் வாங்கியமைக்கு 40 சதவீத மானிய உதவியில் 2-ம் கட்டமாக ரூ.4 லட்சத்துக்கான மானிய விடுப்பு ஆணை மீன் விற்பனையாளர் ஹென்றிக்கு வழங்கப்பட்டது. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மீன்பிடி தொழிலாளர்களுக்கு நாட்டின மீன் குஞ்சுகள் பாதுகாப்பு மற்றும் பெருக்குதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மீனவர் நலத்துறை மண்டல இணை இயக்குனர் அமல் சேவியர், உதவி இயக்குனர்கள் விஜயராகவன், அண்டோ பிரின்சிவையலா, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி,
தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுக பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் கொம்பையா, இசக்கிபாண்டி, கோட்டாளம், சுரேஷ்காந்தி, திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், கருங்குளம் யூனியன் தலைவர் கோமதி ராஜேந்திரன், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் பேரூராட்சி தலைவர் கந்தசிவசுப்பு, நகர செயலாளர் சுப்புராஜ், அரசு வக்கீல் ஷாஜகான், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, நவீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும், 'வாழை' திரைப்படம் தொடக்க விழா கொங்கராயகுறிச்சியில் நடந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்.