எஸ்.ஆர்.எம்.யு.வினர் உண்ணாவிரதம்
திருச்சி, பொன்மலையில் எஸ்.ஆர்.எம்.யு.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. எஸ்.ஆர்.எம்.யு. துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். ரெயில்வேயை தனியார்மயமாக்கும் முடிவை உடனே நிறுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை மாற்றி 2004-க்கு முந்தைய பென்சன் திட்டத்தை வழங்க வேண்டும். ரெயில் நிலையங்களை, விரைவு ரெயில்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. ரெயில்வே பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து நிரந்தர வேலையை பறிக்ககூடாது. லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பாமல் பயணிகள் பாதுகாப்பை அலட்சியப்படுத்தக்கூடாது. சென்சார் மற்றும் ரேடார் போன்ற நவீன கருவிகளை என்ஜினில் பொருத்தி டிராக் மெயின்டனர்களை சரண்டர் செய்வதை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டன. முடிவில் கோட்ட தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார். இதே கோரிக்ககளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை ெரயில்வே பணிமனை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தின் போது, எஸ்.ஆர்.எம்.யு. துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் நிருபர்களிடம் கூறுகையில், உண்ணாவிரதபோராட்டத்தில் வலியுறுத்தப்படும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ரெயில் பயணிகள் பாதுகாப்பை அலட்சியப் படுத்தக்கூடாது. கோரிக்கைள் நிறைவேற்றப்படாவிட்டால் எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் கண்ணையா வழிகாட்டுதலின் படி இந்தியாவில் எந்த ெரயிலும் ஓடாத அளவில் அகில இந்திய அளவில் பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.
இந்த உண்ணாவிரதத்தில் பொன்மலை ெரயில்வே பணிமனையில் பணியாற்றும் ெரயில்வே ஊழியர்கள் மற்றும் ெரயில்வே பணியாளர்கள், ெரயில்வே அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ெரயில்வே கோட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.