எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.15 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.15 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 21 Jun 2022 2:27 AM IST (Updated: 21 Jun 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.15 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர்

பொதுத்தேர்வு முடிவு

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் விவரம் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள், அவர்களது பெற்றோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) மூலம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டது. இதில் அவர்களது பெயர், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், தேர்ச்சி அல்லது தோல்வி என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்ச்சி சதவீதம்

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 143 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 186 மாணவர்களும், 3 ஆயிரத்து 704 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 890 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 18 மாணவர்களும், 3 ஆயிரத்து 647 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 665 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 95.99 சதவீதமும், மாணவிகள் 97.15 சதவீதமும் என மொத்தம் 97.15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 173 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 237 மாணவர்களும், 4 ஆயிரத்து 993 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 230 பேர் எழுதினர். இதில் 4 ஆயிரத்து 619 மாணவர்களும், 4 ஆயிரத்து 758 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 377 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.20 சதவீதமும், மாணவிகள் 95.29 சதவீதமும் என மொத்தம் 91.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.


Next Story