புனித அந்தோணியார் ஆலய திருவிழா :வியாழக்கிழமைதொடங்குகிறது


புனித அந்தோணியார் ஆலய திருவிழா :வியாழக்கிழமைதொடங்குகிறது
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:26+05:30)

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா வியாழக்கிழமைதொடங்குகிறது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துவ ஆலயங்களில் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயம் மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலத்தை தென்னகத்து பதுவை என்று அழைக்கப்படுகிறது. புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தை திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 5.30 மணிக்கு சிவகங்கை முன்னாள் மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் செபமாலை நிகழ்ச்சியும், தொடர்ந்து 6 மணிக்கு கொடி ஏற்றம் நடக்கிறது. பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

விழா நாட்களில் தினமும் காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை ஆசி நடக்கிறது. 6-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருப்பலி மற்றும் தேர்பவனியும் நடக்கிறது. 7-ந்தேதி பாளையங்கோட்டை மறைமாவட்ட பொருளாளர் அந்தோணிசாமி, பாளையங்கோட்டை பங்குத்தந்தை சந்தியாகு, மறை மாவட்ட செயலாக முதல்வர் ஞானபிரகாசம் ஆகியோர் தலைமையில் அதிகாலை 4.30 மணி, 6 மணி, 7.30 மணிக்கு திருவிழா திருப்பலியும், பகல் 11.45 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது.

திருவிழாவில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். திருவிழாவின் போது தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி பங்குத்தந்தை மோட்சராஜன், ஆன்மீக பங்குத்தந்தை சகாயதாசன், உதவி பங்குத்தந்தை நிக்கேல்ராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story