அந்தோணியார் ஆலய தேர்பவனி
அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.
திருச்சி
திருச்சி, ஜூன்.14-
திருச்சி, மார்சிங்பேட்டையில் உள்ள அர்ச்.அந்தோணியார் ஆலயத்தில் 121-வது ஆண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெளிவீதி தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருப்பலியும், அதனைத் தொடர்ந்து வான வேடிக்கையும் நடந்தது. நேற்று இரவு உள் வீதி தேர் பவனி நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) அன்னதானமும், நாளை (புதன்கிழமை) இரவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story