புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி
கீழையூர் அருகே புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி நடந்தது.
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி:
கீழையூர் அருகே மேல ஈசனூரில் புனித செபஸ்தியார் ஆலய விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக கருங்கண்ணி பங்குத்தந்தை டேவிட் செல்வகுமார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மிக்கேல் சம்மனசு, மாதா, செபஸ்தியார் சொரூபங்கள் வைக்கப்பட்டது. பின்னர் தேரை பங்கு தந்தை டேவிட் செல்வகுமார் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். தேர் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. .அப்போது வாணவேடிக்கை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா பொறுப்பாளர்கள் ஜான் பிரிட்டோ, தவுமணிக்சாவியோ மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story