சம்பளம் வழங்கக்கோரிமாவட்ட கல்வி அலுவலகத்தில் ஊழியர் உள்ளிருப்பு போராட்டம்விருத்தாசலத்தில் பரபரப்பு


சம்பளம் வழங்கக்கோரிமாவட்ட கல்வி அலுவலகத்தில் ஊழியர் உள்ளிருப்பு போராட்டம்விருத்தாசலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Jan 2023 1:33 AM IST (Updated: 4 Jan 2023 3:02 PM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்கக்கோரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஊழியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் (இடைநிலை கல்வி) பதிவறை எழுத்தராக பணி புரிந்து வருபவர் வெங்கடேசன். இவர் தனக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்பட வில்லை என கூறி பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், அரசாணை எண் 151-ன் கீழ் கடந்த 30.9.2022 அன்று நிர்வாகம் மாறுதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நல்லூர் வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து, விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலக பதிவறை எழுத்தராக கடந்த அக்டோபர் மாதம் முதல் பணியாற்றி வருகிறேன். இதுவரை எனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. ஆகவே எனக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றார். இதைகேட்ட அதிகாரிகள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும், அவர் அலுவலக பணி நேரம் முடியும் வரை பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story