ரெயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழைநீர்
ஆயக்குடி அருகே ரெயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல்
ஆயக்குடி அருகே உள்ள பச்சளநாயக்கன்பட்டியில் ரெயில்வே சுரங்க பாதை அமைந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விளைப்பொருட்களை கொண்டு செல்வதற்கு அந்த வழியை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் பழனி, ஆயக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பச்சளநாயக்கன்பட்டி ரெயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சுரங்கப்பாதையில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்ற ரெயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story