சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்; கிராம மக்கள் அவதி
நத்தம் அருகே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் கிராம மக்கள் அவதியடைந்தனர்.
திண்டுக்கல்
நத்தம் அருகே துவரங்குறிச்சி செல்லும் 4 வழிச்சாலையில் சேர்வீடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு செல்வதற்காக நான்கு வழிச்சாலையின்கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதையை பயன்படுத்தி கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சேர்வீட்டிலும் கனமழை பெய்தது. மேலும் அந்த கிராமத்திற்கு செல்லும் சுரங்கப்பாதையில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் கிராம மக்கள் தங்களது ஊருக்குள் செல்ல முடியாமல், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேர்வீடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story