ஈரோட்டில் தபால் தலைகள் கண்காட்சி


ஈரோட்டில் தபால் தலைகள் கண்காட்சி
x

ஈரோட்டில் தபால் தலைகள் கண்காட்சி

ஈரோடு

அக்டோபர் மாதம் 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தேசிய தபால் வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் தபால் தலைகள் கண்காட்சி நேற்று நடைபெற்றது. ஈரோடு தபால் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு கண்காட்சியை தொடங்கி வைத்தார். உதவி கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் வரவேற்று பேசினார்

. இந்த கண்காட்சியில் தபால் தலை சேகரிப்பாளர்கள் ஜீவதாஸ், சம்பத்குமார் ஆகியோரின் தபால் தலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில் அரிய தபால் தலைகள், மிகச்சிறிய, மிகப்பெரிய தபால் தலைகள், விலை உயர்ந்த மற்றும் தலைவர்கள், தனி நபர்களின் தபால் தலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றன. இதை பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் உள்பட பலர் ஆர்வமாக பார்வையிட்டனர்.

இந்த கண்காட்சியில் தபால் வணிக அதிகாரிகள் வெள்ளியங்கிரி, சதீஷ்குமார், அலுவலக உதவியாளர் கவுதமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இன்று (புதன்கிழமை) தபால் தினமும், நாளை (வியாழக்கிழமை) சாமானியர் நல்வாழ்வு தினமும் கடைபிடிக்கப்படுகிறது.


Next Story