குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைகீழாக நின்று நூதன போராட்டம்
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைகீழாக நின்று பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைகீழாக நின்று பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு கிராமம் அருகே உள்ள மலையடிவாரத்தில் திருவண்ணாமலை நகரம் முழுவதிலும் சேகரமாகும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புனல்காடு கிராம மக்கள் கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 12-வது நாளான நேற்று, மலையடிவாரத்தில் இயற்கை சூழல் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கும் வகையில் அப்பகுதி மக்களில் சிலர் தலைகீழாக நின்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இயற்கையான கிராமப் பகுதியில் அதிக அளவில் குப்பைகளை கொட்டுவதால், தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story