அங்கன்வாடி கட்டிட பணிகளை தொடங்க வேண்டும்


அங்கன்வாடி கட்டிட பணிகளை தொடங்க வேண்டும்
x

திருவாரூர் வட்டாரத்தில் பணிகள் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிட பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் வட்டாரத்தில் பணிகள் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிட பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊராட்சி ஒன்றிய கூட்டம்

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-

12-வது வார்டு உறுப்பினர் நடராஜன்:-புதுபத்தூர் பகுதியில் பாலம் சேதமடைந்துள்ளதால் ஏராளமானோர் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே உடனே பாலத்தை சீரமைத்து தரவேண்டும்.2- வது வார்டு உறுப்பினர் குணசேகரன்:- எனது ஊராட்சியில் உள்ள ஆற்றங்கரை சாலையை சீரமைக்கவேண்டும். குளங்களில் சேதமடைந்துள்ள படித்துறையை சீரமைக்க வேண்டும்.6-வது வார்டு உறுப்பினர் முருகேசன்:- தியானபுரம் ஆதிதிராவிடர் தெரு சாலையை சீரமைக்கவேண்டும்.

அங்கன்வாடி

திருவாரூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வட்டார ஒருங்கிணைப்பாளர் அமர்நாத்:- ஈஞ்சல், சோழங்கநல்லூர், அலிவலம் கருப்பூர், வாஞ்சூர், சேமங்கலம், குன்னியூர், வேப்பத்தாங்குடி, கொட்டாரக்குடி, திருவாசல் தெரு, கல்யாணமகாதேவி, தண்டலை, நாரணமங்கலம், கொடிமரம், நடப்பூர், சோழங்கநல்லூர் பள்ளி, வைப்பூர் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனே தொடங்கி பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

பள்ளிகளுக்கான பணிகள்

இதற்கு பதில் அளித்து பேசிய ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா கூறியதாவது:-உறுப்பினர்கள் அளித்துள்ள கோரிக்கைகள் வீணாகாது. அவை துறைவாரியாக அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிறைவு செய்யப்படும். மாவட்டத்தில் பள்ளிகளுக்கான பணியில் அதிகஅளவில் பணிகள் திருவாரூர் ஒன்றியத்தில் தான் நடக்கிறது. கூட்டத்தில் துணைத்தலைவர் துரை தியாகராஜன் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அலுவலக மேலாளர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.


Next Story