நாடாளுமன்ற தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்குங்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அனைத்து அணிகள் மற்றும் குழுக்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள். தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். அவர்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். மேலும், 23 அணி நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமையாக கருதிக் கொள்ளாமல், களத்தில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story