அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
காங்கயம்
காங்கயம் நகராட்சிப் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாரச் சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கடைகள், வாரச் சந்தை கடைகள், நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி, உரக் கிடங்கில் உரமாக்கும் பணி, கசடு கழிவு மேலாண்மை திட்டப்பணி, அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டப் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று காங்கயத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வார்டு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள குடியிருப்புகளில் குப்பைகள் முறையாக பிரித்து வழங்கப்படுவதையும், அதனை தூய்மைப் பணியாளர்கள் சரியான நேரத்தில் சேகரிக்கிறார்களா? என்பது குறித்தும் பொது மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் நகரில் நடைபெற்று வரும் இத் திட்டப்பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் எஸ் வினீத், திருப்பூர் மாநகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன், காங்கயம் நகராட்சி ஆணையாளர் எஸ். வெங்கடேஷ்வரன், நகராட்சிப் பொறியாளர் எம்.பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர்.