மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணைய கட்டிடம்:கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணைய கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிதாக தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணைய திட்ட அலுவலர் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு துணைத்தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர் விஜயராகவன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.