அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு தொடங்கியது


அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு தொடங்கியது
x

அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு புதுக்கோட்டையில் தொடங்கியது.

புதுக்கோட்டை

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க 6-வது மாநில மாநாடு புதுக்கோட்டையில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று அங்கன்வாடி ஊழியர்களின் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சின்னப்பா பூங்கா அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொது செயலாளர் டெய்சி, சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து 2-வது நாளாக இன்று (சனிக்கிழமை) மாநாடு நடைபெற உள்ளது. மாநில பொது செயலாளர் டெய்சி நிருபர்களிடம் கூறுகையில், ''அங்கன்வாடி ஊழியர்களாக 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு செலவின தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 21 கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றப்படும் என வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை மாநாட்டில் முடிவு செய்வோம்'' என்றார்.


Next Story