மாநில அளவிலான கலைத்திருவிழா; மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி
மாநில அளவிலான கலைத்திருவிழா; மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கலைத்திருவிழா காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று பசுபதீஸ்வரர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், உதவி திட்ட அலுவலர் சக்திவேல் வட்டார கல்வி அலுவலர்கள் அழகேசன், மணிமாலா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை வழி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story